2013-10-31 16:07:13

குளிர்காலத்தில் கண்ணாடிகள் மூலம் முதல் தடவையாக ஒளிபெறும் நகரம்


அக்.31,2013. நார்வே நாட்டில் வழக்கமாக, குளிர் காலத்தில் சூரிய ஒளி இன்றி இருண்டு கிடக்கும் Rjukan என்ற நகருக்கு மூன்று இராட்சத கண்ணாடிகள் மூலம் முதற்தடவையாக இந்த ஆண்டு ஒளி கிடைத்துள்ளது.
ஓர் ஆழமான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இந்த நகருக்கு, அதனைச் சூழ்ந்துள்ள மூன்று மலைகளால் குளிர் காலத்தில் 6 மாதங்களுக்கு சூரிய ஒளி கிடைக்காது. அந்த மலைகள் சூரிய ஒளியை அந்நகருக்குக் கிடைக்காமல் மறைத்துவிடும்.
ஆகவே இந்த நகரைச்சுற்றி அமைந்துள்ள மலைகளில் இராட்சத கண்ணாடிகளைப் பயன்படுத்தி, குளிர் காலத்தில் 6 மாதங்களுக்கு ஒளி வழங்க வேண்டும் என்ற திட்டம், 100 ஆண்டுகளுக்கு முன்னரே அரசிடம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், அதற்கான தொழில்நுட்பம் 2003ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. குளிர்காலத்தில் முதல் தடவையாக சூரிய ஓளியை வரவேற்க இந்நகரம் தற்போது பெரும் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்பாராத ஒளி, கண்பார்வையைக் கெடுத்துவிடலாம் என்பதை மனதில் கொண்டு, அந்த நகரத்தில் உள்ள பள்ளிச் சிறார்கள் அணிந்து கொள்வதற்காக, குளிர்விக்கும் மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.