2013-10-30 15:10:50

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


அக்.30,2013. வழக்கத்திற்கு மாறாக, அக்டோபர் மாத இறுதியிலும் கோடைக்காலத்தின் இரேகைகள் தொடர்ந்துகொண்டிருக்க, இப்புதனன்று அந்த இதமான காலநிலையைப் பயன்படுத்திக்கொண்டு, உரோம் நகரின் தூய பேதுருவளாகத்திலேயே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இவ்வார புதன் பொதுமறைபோதகத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கத்தோலிக்கர்களின் விசுவாசப்பிரமாணம் குறித்து தன் புதன் மறைபோதகங்களில் தொடர்ந்து உரைவழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் 'புனிதர்களுடைய சமூக உறவையும் விசுவசிக்கிறேன்' என்ற பகுதி குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். கத்தோலிக்கத்திருஅவை நமக்கு நினைவுறுத்துவதுபோல், இது 'புனிதப்பொருட்களின் சமூகஉறவு' மற்றும் 'புனிதர்களிடையேயானஒன்றிப்பு'. புனிதர்களின் சமூகஉறவே திருஅவையின் ஆழமானஉண்மைநிலை. ஏனெனில், தூயமூவொருக்கடவுளாகஇருக்கும் அன்பு மற்றும் வாழ்வின் ஒன்றிப்பில் நம் திருமுழுக்கு வழியாககிறிஸ்துவில் நாம் பங்காளர்களாகஆக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு, நாம் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரோடு கிறிஸ்துவின் உடலில் இணைக்கப்பட்டுள்ளோம். இந்தசகோதரஒன்றிப்பின் மூலமாகநாம் இறைவனுக்கு அருகாமையில் நெருங்கிச் செல்வதோடு, ஒருவர் மற்றவருக்காகஆன்மீகரீதியாகஉழைக்கவும் அழைப்பு பெற்றுள்ளோம். புனிதர்களின் சமூக உறவு என்பது இவ்வுலகின் திருஅவையை மட்டும் உள்ளடக்கவில்லை, மாறாக, கிறிஸ்துவில் மரணமடைந்துள்ள அனைவரையும், உத்தரிக்கும் தலத்தில் உள்ள அனைத்து ஆன்மாக்களையும், வானுலகின் புனிதர்களையும் உள்ளடக்கி நிற்கிறது. வானத்திற்கும் பூமிக்கும் இடையேயான இந்த ஒருமைப்பாட்டை நாம் நம் பரிந்துரைச் செபங்களிலும், அண்மையில் கொண்டாடப்பட உள்ள அனைத்துப்புனிதர்கள், மற்றும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழாக்களிலும் அனுபவிக்கிறோம். இந்த மிகப்பெரும் மறையுண்மை குறித்து மகழ்ச்சியுறும் அதேவேளை, இறைவன் நம்மை தமக்கு நெருக்கமாக வைத்திருக்கவும், திருஅவையில் நம் சகோதர சகோதரிகளோடு நாம் மேலும் நெருங்கிவரவும் இறைவனை நோக்கி வேண்டுவோம், என தன் புதன் மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
தன் மறைபோதகத்தின் இறுதியில், ஈராக்கிலிருந்து வந்திருந்த பல்வேறு மதப்பிரதிநிதிகளின் குழுவுக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக்கிற்கான செபத்திற்கும் அழைப்புவிடுத்தார். வன்முறைகளால் ஒவ்வொருநாளும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த அனபுநிறை நாடு, ஒப்புரவின், அமைதியின், ஒன்றிப்பின், நிலையானதன்மையின் பாதையைக் கண்டுகொள்ளுமாறு இறைவனை நோக்கி அனைவரும் வேண்டுவோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.







All the contents on this site are copyrighted ©.