2013-10-25 15:54:11

விவிலியத்திலும், திருக்குரானிலும் இடம்பெற்றுள்ள பெண்கள் - ஜோர்டன் நாட்டில் கருத்தரங்கு


அக்.25,2013. மத்தியக் கிழக்குப் பகுதி சமுதாயத்திலும், திரு அவையிலும் பெண்களின் பங்கு என்ற மையக் கருத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கருத்தரங்கை, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, Fouad Twal அவர்கள் இவ்வியாழனன்று துவக்கி வைத்தார்.
WUCWO (World Union of Catholic Women's Organisations) என்றழைக்கப்படும் கத்தோலிக்கப் பெண்கள் அமைப்புக்களின் அகில உலக ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கு, ஜோர்டன் நாட்டு அரசி, Rania அவர்களின் ஆதரவுடன், Fuheis என்ற நகரில் நடைபெறுகிறது.
விவிலியத்திலும், திருக்குரானிலும் இடம்பெற்றுள்ள பெண்கள் என்ற தலைப்பில், அன்னை மரியா உட்பட பல பெண்களின் பங்களிப்பு குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அக்டோபர் 27, வருகிற ஞாயிறு முடிய நடைபெறும் இக்கருத்தரங்கின் இறுதித் திருப்பலியை, ஜோர்டன் நாட்டின் தலைமைப் பணியாளர், பேராயர் Maroun Laham அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1910ம் ஆண்டு நிறுவப்பட்ட WUCWO கத்தோலிக்கப் பெண்கள் அமைப்பு, 60 நாடுகளில், 50 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.