2013-10-24 16:32:01

சிரியாவுக்கு கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகளின் நிதியுதவி


அக்.24,2013. அகில உலக கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகள் இணைந்து, 72மில்லியன் டாலர்கள், அதாவது, ஏறத்தாழ 360 கோடி ரூபாயை சிரியாவுக்கு அனுப்பியுள்ளன.
திருத்தந்தையின் பிறரன்பு அவையான 'ஒரே இதயம்' என்று பொருள்படும் ‘Cor Unum’ அவை, இந்த நிதி உதவியை, சிரியாவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
32 கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகளின் இணைந்த பல்வேறு முயற்சிகள், 2011ம் ஆண்டு, சிரியாவில் பிரச்னைகள் துவங்கிய காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ‘Cor Unum’ அவையின் ஒரு செய்திக்குறிப்பு கூறுகிறது.
தன் தலைமைப்பணியை ஏற்ற காலத்திலிருந்து சிரியாவில் நிகழும் வன்முறைகளைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு தருணங்களில் கூறிவருவதுடன், ‘Cor Unum’ அமைப்பினரையும் இதே கருத்துடன் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : VIS








All the contents on this site are copyrighted ©.