2013-10-24 16:33:21

ஐக்கிய நாடுகள் தினத்திற்கான ஐ.நா. பொதுச்செயலரின் செய்தி


அக்.24,2013. அமைதிக்கும் பொதுநலமுன்னேற்றத்திற்கும் இதுவரை ஆற்றியுள்ள பங்கு குறித்து ஆராயவும், மேலும் சிறந்த உலகை உருவாக்குவது குறித்து திட்டமிடவும் ஐக்கிய நாடுகள் தினம் சிறப்பிக்கப்படுகிறது என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்டஐ.நா. தினம் குறித்து சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர், சிரியாவில் இடம்பெறும் மோதல்களே இக்காலத்தின் மிகப்பெரும் பாதுகாப்புச் சவாலாக இருப்பதாகவும் தன் கவலையை வெளியிட்டுள்ளார்.
மில்லென்னிய இலக்குகளை அடைவதற்கு குறிக்கப்பட்ட 2015ம் ஆண்டைக் குறித்துப் பேசிய பான் கி மூன் அவர்கள், ஐ.நா.வின் தொடர்முயற்சிகளால் உலகின் வறுமை பாதியளவு குறைந்துள்ளதை மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
1945ம் ஆண்டு உலக நாடுகள் இணைந்து வெளியிட்ட ஓர் உறுதிமொழியின் அடிப்படையில் ஐ.நா. அமைப்பு உருவானது. இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் 1948ம் ஆண்டு முதல், அக்டோபர் 24ம் தேதி, ஐக்கிய நாடுகள் தினம் என்று சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.