2013-10-23 15:31:31

அக்.24,2013 கற்றனைத்தூறும் ... பெயரில் பெருமை


அமெரிக்க ஐக்கிய நாட்டு அங்கிள் சாம் வில்சன் என்ற மாமிச ஆய்வாளர் தனது மாமிசப் புட்டிகளில் யு.எஸ் என்று தன்னுடைய முத்திரையை 1812ம் ஆண்டு போரின்போது பதித்ததை, சில பணியாளர்கள் யு.எஸ் என அழைக்கத் தொடங்கவே அதுவே அந்நாட்டுக்குச் செல்லப் பெயரானது.
லெனின் என்பவரின் இயற்பெயர் விளாடிமிர் இல்லிச் உள்எனாம். அவர் 151 புனைப்பெயர்களில் எழுதினார். அவற்றுள் லெனின் என்பதே அவரின் நிரந்தரப் பெயராகியது.
புவியியல் வல்லுநர் மெர்க்காட்டன் தன்னுடைய வரைபடப் புத்தகத்துக்கு கிரேக்க மேதை அட்லஸ் உலகத்தைத் தூக்கிக் கொண்டிருக்கும் படத்தை அட்டைப்படமாகப் போட்டதுதான், வரைபடப் புத்தகத்துக்கு அட்லஸ் என்ற பெயர் வந்தது.
ஆஸ்திரேலியாவுக்குப் புதிதாகச் சென்ற ஓர் ஐரோப்பியர் அந்நாட்டில் தத்தித் தத்தி ஓடும் மிருகங்களைக் கண்டு அதிசயித்தார். எனவே அதற்கு என்ன பெயர் என்று அவ்விடத்தில் சென்றுகொண்டிருந்த அவ்வூர் பழங்குடியினர் ஒருவரைக் கேட்டார். அந்த ஐரோப்பியர் கேட்ட மொழி புரியாமல் அவர், தனது தாய்மொழியில் நீர் பேசுவது புரியவில்லை என்ற பொருளில், கங்காரு என்று சொன்னார். அதுவே அந்த தத்தித் தத்தி ஓடும் மிருகத்தின் பெயரானது
அன்றைய பாரசீகமே இன்றைய ஈரான்.
அன்றைய பாடலிபுத்திரமே இன்றைய பாட்னா.
காக்காய் கரைவதால் அது காகமானது. குயில் கூக்கூ எனக் கூவுவதால் அது குயிலானது.

ஆதாரம் : நூல்கள்








All the contents on this site are copyrighted ©.