2013-10-22 16:26:30

நவீன அடிமைத்தனத்துக்குப் பல முகங்கள், மனித உரிமைகள் வல்லுனர்


அக்.22,2013. உலகெங்கும் நவீன அடிமைத்தனம் பல்வேறு பெயர்களில் இடம்பெற்றாலும், இந்த அடிமைத்தனம் எங்கும் மேலோங்கிக் காணப்படுகின்றது என்று மனித உரிமைகள் வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார்.

பல்வேறு விதமான பாலியல் வன்கொடுமைகள், கட்டாயத் தொழில்முறைகள், அடிமைத்தனத்துக்கு ஒத்த செயல்பாடுகள், உறுப்புக்களை எடுத்துவிடுதல் போன்றவை, ஐ.நா.வின் 2013ம் ஆண்டின் அடிமைநிலை குறித்த அறிக்கையின்படி நவீன அடிமைத்தனங்கள் என்று விளக்கியுள்ளார் மனித உரிமைகள் வல்லுனர் Ana Steele.

அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் பிரிட்டனில் செயல்படும் தலித் சுதந்திர வலையமைப்பின் தலைவரான Ana Steele அவர்கள், நவீன அடிமைத்தனங்கள் எங்கெங்கு காணப்படுகின்றனவோ அவற்றைக் களைவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தியுள்ளார்.

நவீன அடிமைத்தனங்கள் பல முகங்களை எடுத்துள்ளன என்பதையும், இன்று உலகில் 2 கோடியே 98 இலட்சம் பேர் நவீன அடிமைத்தனங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என ஐ.நா. அறிக்கை குறிப்பிடுவதையும் Steele அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.