2013-10-22 16:18:58

திருப்பீடத்திற்கும் ஹங்கேரி நாட்டிற்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது


அக்.22,2013. திருப்பீடத்திற்கும் ஹங்கேரி நாட்டிற்கும் இடையே 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் திருத்தங்களைக் கொணர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் இத்திங்களன்று ஹங்கேரி தலைநகர் Budapestல் கையெழுத்திட்டன.
2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹங்கேரியில் கொணரப்பட்ட, அடிப்படை சட்ட மாற்றங்களுக்கு இயைந்த வகையில் ஹங்கேரி அரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவிய பழைய ஒப்பந்தத்திலும் மாற்றங்கள் கொணரப்பட்டுள்ளன.
இப்புதிய மாற்றங்களின்படி, பள்ளிகளில் மதவகுப்புகளுக்கு நிதி உதவி, உயர்கல்விகளில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்களிப்பு, திருஅவையின் வரலாற்றுச்சிறப்புமிக்க கட்டிடங்களைப் புதுப்பித்தல், திருஅவையின் கலைப்பொருட்களுக்குப் பாதுகாப்பளித்தல் போன்றவை புதிய ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
திருப்பீடத்திற்கும் ஹங்கேரி நாட்டிற்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட இந்நிகழ்ச்சியில், ஹங்கேரி நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Alberto Bottari de Castello தலைமையிலான குழுவும், ஹங்கேரி துணைப்பிரதமர் Zsolt Semjén தலைமையிலான குழுவும் கலந்துகொண்டன.


ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.