2013-10-22 16:25:16

கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள் சிரியாவிலும் மத்திய கிழக்கிலும் அமைதி நிலவ அழைப்பு


அக்.22,2013. ஐரோப்பாவின் வளமையான மரபுகள் ஒரு நினைவுச்சின்னமாக வியந்து நினைவுகூர்வதற்கல்ல, ஆனால் உலகாயுதப்போக்கிலும், கிறிஸ்தவமல்லாத உணர்விலும் சென்றுகொண்டிருக்கும் ஐரோப்பிய கலாச்சாரத்தைக் குணப்படுத்துவதற்கான வாழ்வின் ஊற்று அது என்று ஐரோப்பாவின் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஸ்லாவிய இன மக்கள் மத்தியில் நற்செய்தி அறிவிக்க வந்த புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ், சுலோவாக்கிய குடியரசின் Kosice நகருக்கு வந்ததன் 1150ம் ஆண்டையொட்டி அந்நகரில் கூட்டம் நடத்திய கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள், அத்திருஅவைகளின் அனைத்துக் கத்தோலிக்கருக்கும் நன்மனம்கொண்ட எல்லாருக்குமென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ளனர்.

கலாச்சாரத்தின் ஐரோப்பியத் தலைநகர் என்று 2013ம் ஆண்டில் அழைக்கப்படும் Kosice நகரிலிருந்து வெளியிட்டுள்ள செய்தியில், ஐரோப்பாவின் ஆழமான கிறிஸ்தவ மரபுகளை நினைவுபடுத்தியுள்ளனர் ஆயர்கள்.

மத்தியக் கிழக்கிலும், குறிப்பாக சிரியாவில் நம் சகோதர சகோதரிகள் எதிர்கொள்ளும் துன்பமானச் சூழலை நினைவுகூர்ந்துள்ள ஆயர்கள், திருத்தந்தையோடு இணைந்து அப்பகுதியில் அமைதி நிலவ வேண்டுகோள் விடுப்பதாக அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.