2013-10-21 16:02:57

கிறிஸ்தவ மறைப்பணி மதமாற்றும் பணியல்ல, ஆனால், விசுவாசச் சுடரைப் பரப்பும் பணியாகும், திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.21,2013. மேலும், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக மறைபரப்பு ஞாயிறு குறித்தும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவ மறைப்பணி மதமாற்றும் பணியல்ல, ஆனால், விசுவாசச் சுடரைப் பரப்பும் பணியாகும் என்று கூறினார்.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஒரு திருட்டுச் சம்பவத்தில் சில நாள்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட இத்தாலிய அருள்சகோதரி Afra Martinelli பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், நைஜீரியாவில் பல ஆண்டுகள் மறைப்பணியாற்றிய இந்த அருள்சகோதரி தனது வாழ்வாலும், இச்சகோதரி உருவாக்கிய கல்வி மையத்தின் பணி வழியாகவும் நற்செய்தி அறிவித்தார் என்றும் கூறினார்.
இந்த அருள்சகோதரியின் இறப்புக்கு ஒவ்வொருவரும், கிறிஸ்தவரும் முஸ்லீம்களும் வருந்தினர் எனவும் திருத்தந்தை கூறினார்.
மேலும், பிலிப்பீன்சில் இம்மாதம் 15ம் த்தி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் திருத்தந்தை நினைவுகூர்ந்து இதில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகச் செபிக்குமாறும் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
அர்ஜென்டினாவில் இஞ்ஞாயிறன்று அனைனையர் தினம் சிறப்பிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து அனைத்து அனைனையர்க்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.