2013-10-15 16:24:46

கருக்கலைப்பு விவகாரம் தொடர்பாக ஈக்குவதோர் அரசுத்தலைவர் எடுத்துள்ள முடிவுக்கு தலத்திருஅவை பாராட்டு


அக்.15,2013. ஈக்குவதோர் நாட்டில் கருக்கலைப்பை சட்டப்படி அங்கீகரிப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து அந்நாட்டு அரசுத்தலைவர் Rafael Correa அவர்கள் எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார் தலத்திருஅவைத் தலைவர் ஒருவர்.
ஈக்குவதோர் அரசுத்தலைவரின் துணிச்சலைத் தான் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Antonio Arregui, மனித வாழ்வு புனிதமானது, இது எந்நிலையிலும் அழிக்கப்படக் கூடாது எனக் கூறியுள்ளார்.
மேலும், ஈக்குவதோர் சட்டசபை கருக்கலைப்பை சட்டப்படி அங்கீகரித்தால் தான் பதவியிலிருந்து விலகப்போவதாக எச்சரித்துள்ளார் அரசுத்தலைவர் Correa.
தான் ஒரு கத்தோலிக்கர், மனிதநேயமிக்கவர் மற்றும் இடதுசாரி என்று தன்னை அடையாளம் காட்டியுள்ள அரசுத்தலைவர் Correa, கருக்கலைப்பைக் குற்றமற்றதாக்கும் முயற்சியை, தான் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.