2013-10-12 15:57:37

522 இஸ்பெயின் மறைசாட்சிகளுக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம்


அக்.12,2013. இஸ்பெயினில் 1936ம் ஆண்டுக்கும் 1939ம் ஆண்டுக்கும் இடைப்பட காலத்தில் இடம்பெற்ற மிகக் கொடூரமான சமய அடக்குமுறைகளின்போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மறைசாட்சிகளில் 522 பேர் இஞ்ஞாயிறன்று முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவுள்ளனர்.
இந்நவீன கால வரலாற்றில் இடம்பெற்ற மிகக் கொடிய சமய அடக்குமுறைகளில் ஒன்றான இஸ்பானிய சமய அடக்குமுறைகளில் 13 ஆயர்கள், 6536 அருள்பணியாளர்கள், 283 அருள்சகோதரிகள் உட்பட எண்ணற்றவர்கள் கொல்லப்பட்டனர்.
இவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்கனவே முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இஞ்ஞாயிறன்று முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கப்படவுள்ள 522 மறைசாட்சிகளில் 18 வயது Ángel Sánchez Rodríguezம் ஒருவர். இவர் மத்ரித்தில் தனது கார்மேல் சபை துறவிகளுடன் சேர்த்துக் கொல்லப்பட்டவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.