2013-10-10 16:15:34

வட, தென் கொரிய நாடுகளின் இணைப்பை வலியுறுத்தும் கருத்துடன் இரயில் பயணம்


அக்.10,2013. உலக அமைதியையும், குறிப்பாக, வட, தென் கொரிய நாடுகளின் இணைப்பையும் வலியுறுத்தும் கருத்துடன் இரயில் பயணம் ஒன்று அண்மையில் ஜெர்மனியின் பெர்லின் நகரிலிருந்து ஆரம்பமானது.
கத்தோலிக்கத் திருஅவை உட்பட பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பான World Council of Churches, அதாவது, திருஅவைகளின் உலகச் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த பல பயணிகளைத் தாங்கிச் செல்லும் இந்த இரயில், Moscow, Irkutsk, Beijing ஆகிய நகரங்களைத் தாண்டி, வடகொரியாவின் Pyongyang வழியாக தென்கொரியாவின் Busan நகரை அக்டோபர் 28ம் தேதி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரயில் வடகொரியாவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், இப்பயணிகள் தங்கள் பயணத்தை கப்பல் வழி மேற்கொள்வர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
World Council of Churches அமைப்பைச் சார்ந்த இப்பயணிகள் தங்கள் பயணத்தின்போது, செபங்களைச் சொல்லியபடி செல்வர் என்றும், அமைதியை வலியுறுத்தும் செய்திகள் அடங்கிய துண்டுத் தாள்களையும், பலூன்களையும் போகும் வழியில் மக்களுடன் பகிர்ந்துகொள்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.