2013-10-10 15:57:20

குரோவேசியா நாட்டின் அரசுத் தலைவர், திருத்தந்தையுடன் சந்திப்பு


அக்.10,2013. குரோவேசியா நாட்டின் அரசுத் தலைவர் Ivo Josipović அவர்கள், இவ்வியாழன் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தார்.
கத்தோலிக்கப் பாரம்பரியத்தில் ஊறியுள்ள குரோவேசியா நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்து இச்சந்திப்பின்போது பேசப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் குரோவேசியா இணைவது குறித்து மகிழ்வு வெளியிட்டுள்ள வேளை, இந்த இணைப்பினால் அந்நாடு சந்திக்கவிருக்கும் சவால்கள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
உலகின் பல நாடுகள் சந்தித்துவரும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்தும், குரோவேசியா விலிருந்து பிற நாடுகளில் குடியேறியுள்ளவர்கள் குறித்தும் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குரோவேசியா நாட்டின் அரசுத் தலைவர் Ivo Josipović அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்களையும், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் அவையின் தலைவர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.