2013-10-09 16:04:34

அக். 10, 2013. கற்றனைத்தூறும்...... உடல் எடையை குறைக்க...


உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல. அதிலும் அந்த எடையைக் குறைக்க நிறைய பணத்தைச் செலவுசெய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் தொப்பை முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு வீட்டு சமையலறையிலேயே சிறந்த மருந்து இருக்கிறது.
* உடல் எடையைக் குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவுதான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியைத் தருகிறது. அதைத் தவிர்த்தால், உடல் நலம்தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும்.
* தொப்பையைக் குறைக்க, மற்ற வழிகளைவிட சிறந்தது உடற்பயிற்சிதான். அதிலும் நடைப்பயிற்சிதான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது.
* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்கவேண்டும்.
* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது.
* இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும், சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.


ஆதாரம் : இருவர் உள்ளம் இணைய தளம்








All the contents on this site are copyrighted ©.