2013-10-08 14:56:50

கற்றனைத் தூறும் கேள்விக்குறி உருவான வரலாறு


எழுத்து வடிவத்தில் நாம் பயன்படுத்தும் கேள்விக்குறி, 13ம் நூற்றாண்டில் உருவானதாக மொழி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 'கேள்வி' என்ற வார்த்தை இலத்தீன் மொழியில் questio என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையின் முதல் எழுத்தான ‘q’வையும், இறுதி எழுத்தான ‘o’வையும் ஒன்றன் கீழ் ஒன்றாகப் பொருத்தி, தற்போது நாம் பயன்படுத்தும் கேள்விக்குறி உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கணித்துள்ளனர். ‘q’ என்ற எழுத்து, கேள்விக்குறியின் மேல் பகுதியில் காணப்படும் கொக்கி போன்ற அடையாளமாகவும், ‘o’ என்ற எழுத்து கீழே வைக்கப்படும் புள்ளியாகவும் மாறியுள்ளன என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எழுத்து வடிவங்களை ஆய்வு செய்யும் Cambridge பல்கலைக்கழக ஆய்வாளர் Chip Coakley என்பவர், சிரியா (Syriac) மொழியில் கேள்விக்குறி முதன் முதலில் எழுத்துவடிவில் பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டறிந்துள்ளார்.
ஒவ்வொரு மொழியிலும் கேள்விக்குறியின் பயன்பாடு மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக, இஸ்பானிய மொழியில் கேள்வி வாக்கியத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் கேள்விக்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்பத்தில் வைக்கப்படும் கேள்விக்குறி தலைகீழாகவும், இறுதியில் வைக்கப்படும் கேள்விக்குறி நேராகவும் பயன்படுத்தப்படுகின்றன. நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் கேள்விக்குறியின் கண்ணாடி பிம்பம் போன்ற குறியீடு, அரேபிய மொழியிலும், பாரசீக மொழியிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஆதாரம் : Wikipedia








All the contents on this site are copyrighted ©.