2013-10-07 16:30:10

திருத்தந்தை பிரான்சிஸ் : உலகை, பாவத்திலிருந்து காப்பாற்றவல்ல சக்தி, கருணையே


அக்.07,2013. 'மனித குலத்தையும் உலகையும் பாவத்திலிருந்தும் தீமைகளிலிருந்தும் காப்பாற்றவல்ல உண்மையான சக்தி, கருணையே' என்று இத்திங்களன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‏@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணையின் சக்தி குறித்துச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 'மில்லேனியம் வளர்ச்சி நோக்குகள் அனைத்துலக அளவில் வெற்றியடையவில்லை என்பதை நாம் புரிந்துகொள்வது கடினமல்ல' என்று, திருப்பீடச் செயலகம், @terzaloggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.