2013-10-04 16:55:53

திருத்தந்தை பிரான்சிஸ் : மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கும் துன்பங்கள் கிறிஸ்துவின் திருக்காயத் தழும்புகளோடு ஒத்திருக்கின்றன


அக்.04,2013. தனக்கு முன்னர் அமர்ந்திருக்கும் இந்த இளம் மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கும் துன்பங்கள் கிறிஸ்துவின் திருக்காயத் தழும்புகளோடு ஒத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்த மாற்றுத்திறனாளி நோயாளிகளிலுள்ள இந்தத் தழும்புகள் புரிந்துகொள்ளப்பட்டு அவை வெளிப்படுத்தும் செய்திகள் கேட்கப்பட வேண்டும். இயேசு தாம் உயிர்த்த பின்னர் தமது திருத்தூதர்களுக்குத் தோன்றியபோது அவர்கள் அவரின் தழும்புகளை வைத்து அவரை அறிந்து கொண்டனர். இவ்வாறு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், திருநற்கருணைப் பேழையிலுள்ள திருநற்கருணையைச் சுட்டிக்காட்டியும் பேசினார்.இயேசு, திருநற்கருணைப்பேழையில் அப்பத்தின் எளிய மற்றும் தாழ்மையின் வடிவில் பிரசன்னமாக இருக்கிறார். இயேசு இந்தச் சிறாரில், இந்த இளையோரில் மறைந்து இருக்கிறார். இயேசுவை வணங்கி அவரைத் தேடும் கிறிஸ்தவர் அவரின் தழும்புகளில் அவரை எப்படிக் கண்டுகொள்வதென்பதை அறிந்திருக்கின்றனர். இயேசு உயிர்த்தெழுந்தபோது அவர் மிகவும் அழகாக இருந்தார். அப்போது அவரது உடலில் காயங்கள் இல்லை, ஆனால் அக்காயத் தழும்புகளை வைத்திருக்க விரும்பினார். அவற்றைத் தன்னோடு விண்ணுலகுக்கு எடுத்துச் சென்றார். இயேசுவின் தழும்புகள் இவ்விடத்தில் இருக்கின்றன. அவை வானகத்தந்தைக்கு முன்னால் விண்ணில் இருக்கின்றன. இயேசுவின் தழும்புகளுக்கு இவ்விடத்தில் நாம் கவனிப்புக் கொடுக்கிறோம். அவர் விண்ணிலிருந்து தமது தழும்புகளை நமக்குக் காட்டி, ‘நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று நம் அனைவரிடமும் சொல்கிறார்.
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செராஃபிக்கோ மாற்றுத்திறனாளிகள் நிறுவனத்தில் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.