2013-10-03 16:18:32

Macedonia நாட்டில் அன்னை தெரேசாவின் பெயரில் 300 கி.மீ. நீளம் கொண்ட ஒரு துரிதவழிச் சாலை


அக்.03,2013. Macedonia நாட்டின், Balkan பகுதியில் கட்டப்பட்டுவரும் 300 கி.மீ. நீளம் கொண்ட ஒரு துரிதவழிச் சாலைக்கு முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா அவர்களின் பெயர் சூட்டப்படவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் Nikola Gruevski அவர்கள் அறிவித்துள்ளார்.
இதுமட்டுமன்றி, அந்நாட்டின் பணத் தாள்களில் அன்னையின் உருவத்தைப் பதிப்பது குறித்தும் பாராளுமன்றத்தில் ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் பிரதமர் Gruevski அவர்கள் கூறினார்.
அன்னை தெரேசா அவர்கள் பிறந்த ஊரான Skopjeயில், ஆதரவற்றோர் 300 பேரைப் பாராமரிக்கக் கூடிய இல்லம் ஒன்றை தான் அமைத்து வருவதாக, இந்தியத் தொழிலதிபரான Subrata Roy அவர்கள் கூறினார்.
Times of India என்ற செய்தித் தாளுக்கு அளித்த தனிப்பட்ட பேட்டியொன்றில், Roy அவர்கள், Skopje நகரின் மையத்தில் 60 அடி உயரமுள்ள அன்னையின் உருவச்சிலை அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஆதாரம் : TOI








All the contents on this site are copyrighted ©.