2013-09-27 16:05:20

உலகில் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கு நாடுகள் தங்களின் முயற்சிகளைப் புதுப்பிக்க வேண்டும், ஐ.நா.


செப்.,27,2013. உலகில் அணு ஆயுதங்களை அகற்றும் விவகாரம் குறித்த ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள், உலகை அணு ஆயுதங்களற்ற இடமாக மாற்றுவதற்கு நாடுகள் புத்துணர்வுடன் செயல்படுமாறு கேட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், உலகில் அணு ஆயுதங்களைக் களைவது பகல் கனவு என்று சிலர் புகார் செய்யலாம், ஆனால் இத்தகைய புகார்கள், அணு ஆயுதங்களைக் களைவதால் மனித சமுதாயம் அடையவிருக்கும் உறுதியான நன்மைகளைப் புறக்கணிப்பதாக இருக்கின்றது என்று கூறினார்.
அணு ஆயுதச் சோதனைகளைத் தடைசெய்யும் உடன்படிக்கை 1996ம் ஆண்டு செப்டம்பரில் உருவாக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் அமல்படுத்தப்படாமலே உள்ளது எனவும் பான் கி மூன் கவலை தெரிவித்தார்.
இன்று உலகில் 17,300 அணு ஆயுதங்கள் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.