செப்.,24,2013. உலக அளவில் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக
ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில்மட்டும்
சிறார் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியே 80 இலட்சம் என்ற அளவில் குறைந்துள்ளதாக,
ஐநாவின் தொழில் நிறுவனமான ILO வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதிலும்
குறிப்பாக, பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடும், ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை
25 விழுக்காடும் குறைந்துள்ளன. இந்த முன்னேற்றத்துடன் திருப்தியடையக் கூடாது என்றும்
ILO நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆயினும் இன்றும் 16 கோடியே 80 இலட்சம் சிறார், தொழிலாளர்களாக
இருப்பதாக ILO தெரிவித்துள்ளது. இவ்வெண்ணிக்கை, உலகின் சிறார் எண்ணிக்கையில் 11 விழுக்காடாகும்.