2013-09-19 16:53:53

முதுபெரும் தந்தை சாக்கோ Kurdistan பகுதி தேர்தலையொட்டி வெளியிட்டுள்ள செய்தி


செப்.19,2013. ஈராக் சமுதாயத்தின் அடிப்படை விழுமியமாக மதச்சுதந்திரமும், அனைத்து மக்களின் ஒருங்கிணைந்த வாழ்வும் அமையவேண்டும் என்ற இலக்கை நோக்கி கிறிஸ்தவர்கள் உழைக்க முன்வர வேண்டும் என்று பாக்தாத் முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ கூறினார்.
செப்டம்பர் 21, வருகிற சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கும் Kurdistan பகுதி தேர்தலையொட்டி செய்தி வெளியிட்டுள்ள கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், மதம், இனம் இவற்றின் அடிப்படையில் வெறுப்பை வளர்க்கும் போக்கினை அனைத்து வேட்பாளர்களும் புறக்கணிக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையே, சிரியா நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள் குறித்து, அங்குள்ள கிரேக்க கத்தோலிக்க முதுபெரும் தந்தை 3ம் Gregory Laham சார்பில் தலத்திருஅவை பேச்சாளர் அருள்தந்தை Mtanios Haddad அவர்கள், செய்தி வெளியிட்டுள்ளார்.
சிரியாவில் அழிந்துள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், கோவில்கள் என்ற கட்டிடங்களை எழுப்புவதற்கு முன்னர், அந்நாட்டில் அமைதி கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று அருள் பணியாளர் Haddad அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / Fides








All the contents on this site are copyrighted ©.