2013-09-13 14:55:10

செப்.14,2013. கற்றனைத்தூறும்...... இலவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்!


இலவங்கப் பட்டை சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு தேக்கரண்டியில் கால் பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும், நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்துவிடும்.
அமெரிக்க விவசாய துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், இலவங்கப் பட்டையின் மருத்துவ குணம் பற்றி நீண்ட ஆய்வு செய்து இவ்வாறு கண்டுபிடித்துள்ளனர்.
நீரிழிவு முற்றிய நிலையில் உள்ள 60 நோயாளிகளுக்கு, தினமும் ஒரு கிராம் முதல் ஆறு கிராம் வரை இலவங்க பட்டையை கொடுத்து, 40 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் இரத்தம் சோதித்து பார்க்கப்பட்டதில்,
* 18 முதல் 29 விழுக்காடு சர்க்கரை அளவு குறைந்திருந்தது.
* 23 முதல் 30 விழுக்காடு கொழுப்பு அளவு குறைந்திருந்தது.
* இதய நோய் மற்றும் வாதம் ஏற்படுத்தும் கொழுப்பின் அளவு 7 முதல் 23 விழுக்காடு குறைந்திருந்தது.
இந்த ஆய்வை மேற்கொண்ட, அமெரிக்காவில் மேரிலேண்டில் உள்ள விவசாயத்துறையின் மனித ஆராய்ச்சி மற்றும் சத்து மையத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஆன்டர்சன் என்பவர், இந்த ஆய்வு அடிப்படையில் தினமும் கால் அல்லது அரை தேக்கரண்டி அளவு இலவங்கப் பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுமாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் வேதியியல் பேராசிரியர் டான் கிரேவ்ஸ் என்பவரும் இலவங்கப் பட்டையின் மருத்துவக் குணத்தை ஆதரித்துள்ளார். இன்சுலினுக்கு சமமானது இலவங்கப் பட்டை என்கிறார் அவர்.
பொதுவாக, கறிவகை உணவை சமைப்பவர்கள் அதில் இலவங்கப் பட்டையை தவறாமல் சேர்ப்பர். கொழுப்பு சத்து சேராமல் தடுக்கத்தான் அவ்வாறு சேர்க்கின்றனர் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆதாரம் : ‘ஆழ்கடல் களஞ்சியம்’ இணையதளம்








All the contents on this site are copyrighted ©.