2013-09-13 16:09:15

Muzaffarnagar பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம், இந்து முஸ்லிம் நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது


செப்.13,2013. கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக, இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்து முஸ்லிம் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள Muzaffarnagar பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம், இந்து முஸ்லிம் நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
Muzaffarnagar பகுதியில் இந்துக்கள் அதிகம் வாழும் ஒரு காலனியில் முஸ்தகீம் என்பவர் நடத்திவரும் பால் வியாபாரத்தையும், அவரது குடும்பத்தையும் அப்பகுதியின் இந்துக்கள் நாள் முழுவதும் காவல் காத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
கலவரத்தைக் கேள்விப்பட்ட முஸ்தகீம் அவர்களின் உறவினர் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் அந்த காலனியில் எவ்வித ஆபத்தும் இன்றி வாழ்வதாக எடுத்துரைத்தார்.
கடந்த இரு வாரங்களாக இப்பகுதியில் நிகழ்ந்த பல மோதல்களில் இதுவரை 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இன்னும் பல்லாயிரம் பேர் அப்பகுதியைவிட்டு வெளியேறி உள்ளனர் என்றும் செய்திகள் கூறி வருகின்றன.

ஆதாரம் : UCAN/ Ibnlive








All the contents on this site are copyrighted ©.