2013-09-11 16:18:18

அரசியல் முறைகளைக் காட்டிலும் அனைத்து மனிதரும் செபத்தில் இணைவதால் அமைதி சாத்தியமாகும் - கர்தினால் Bráz de Aviz


செப்.11,2013. மனித வரலாறு பல போர்களைச் சந்தித்துள்ளது எனினும், தற்போதைய உலகமயமாக்கல் என்ற போக்கின் ஒரு பக்க விளைவாக, உலகின் ஒரு பகுதியில் நடக்கும் போர், அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்க்கிறது, அமைதியைத் தேடவைக்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில், சிரியாவில் அமைதி உருவாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் João Bráz de Aviz அவர்கள், Zenit கத்தோலிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில், இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை சனிக்கிழமையன்று மேற்கொண்ட வழிபாட்டு முயற்சிகளில் அனைத்து மதத்தவரையும் கலந்துகொள்ள விடுத்த அழைப்பு, உலகில் மத நம்பிக்கையுள்ளோர் அனைவருமே அமைதியை நாடுகின்றனர் என்பதைத் தெளிவாக்கியது என்று கர்தினால் Bráz de Aviz அவர்கள் கூறினார்.
அரசியல் முறைகள் வழியாக அமைதியைக் கொணர்வதைக் காட்டிலும் அமைதியை விரும்பும் அனைத்து மனிதரும் செபத்தில் இணைவதால் அமைதி சாத்தியமாகும் என்பதை திருத்தந்தையின் முயற்சிகள் தெளிவாக்குகின்றன என்பதை கர்தினால் Bráz de Aviz அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.