2013-09-10 16:32:09

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: முதல் இடத்தில் டென்மார்க்


செப்.10,2013. உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக டென்மார்க் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
வாழ்க்கையின் எதிர்பார்ப்பு, சமூக ஆதரவு, தாராள மனப்பான்மை, வாழ்க்கை முறையினை தெரிவு செய்வதற்கானச் சுதந்திரம், பொருளாதாரம், ஊழல்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் போன்றவற்றைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் மகிழ்ச்சியான நாடுகளாக கருதப்படுகின்றன.
கிரேக்கம், இத்தாலி, ஜப்பான் ஆகியவை மகிழ்ச்சியற்ற நாடுகளாகவும், டென்மார்க் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும் கருதப்படுகின்றது.
மேலும் இவ்வறிக்கையை எழுதிய ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைகழக பேராசிரியர் John Helliwell, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைமுறைதான் என்று தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.