2013-09-10 16:16:43

உரோம் நகரில் இயேசபையினர் நடத்தும் புலம்பெயர்ந்தோர் மையத்தில் திருத்தந்தை


செப்.10,2013. வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து, இத்தாலி நாட்டிற்குள் வாழ்வோருக்கென உரோம் நகரில் இயேசுசபையினரால் நடத்தப்படும் பணி மையத்தைச் சென்றுப் பார்வையிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய்க்கிழமை பிற்பகல் உரோம் நகரின் மையப்பகுதியிலுள்ள Astalli புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு மையம் சென்ற திருத்தந்தை, அங்கு புலம்பெயர்ந்தோர் குழு ஒன்றைச் சந்தித்ததுடன், இயேசு கோவிலுள்ள இயேசு சபையின் முன்னாள் உலகத்தலைவர் அருட்பணி Pedro Arrupeயின் கல்லறையையும் தரிசித்தார்.
அருட்பணி அருப்பேயின் தூண்டுதலால் 1981ல் துவக்கப்பட்ட இந்த புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு மையம், ஒவ்வொரு நாளும் 400 அகதிகளுக்கு உணவு வழங்கி வருகிறது. இயேசு சபையினரால் நடத்தப்படும் இந்த மையத்தின் மூலம், புலம்பெயர்ந்தோர் கல்விகற்கவும், வேலைதேடவும், சமூகத்தில் ஒருங்கிணையவும் உதவிகளைப் பெறுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.