2013-09-04 16:38:13

ஜி20 நாடுகள் ஏழைகளுக்குச் செய்துள்ள சேவைகள் குறித்துப் பரிசீலிக்குமாறு உதவி நிறுவனங்கள் வேண்டுகோள்


செப்.04,2013. இரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸபெர்கில் இவ்வியாழனன்று தொடங்கும் ஜி20 நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள் உலகின் மிகவும் வறிய நிலையில் வாழும் மக்களுக்குத் தாங்கள் செய்துள்ள சேவைகள் குறித்துப் பரிசீலிக்குமாறு கேட்டுள்ளன கத்தோலிக்க உதவி நிறுவனங்கள்.
உலகின் பொருளாதாரத்தை நீதி நிறைந்ததாக ஆக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் ஜி20 நாடுகள் ஆற்றியுள்ள பணிகளைச் சீர்தூக்கிப் பார்க்குமாறு அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் உட்பட கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் கேட்டுள்ளன.
செப்டம்பர் 5,6 தேதிகளில் நடைபெறும் ஜி20 நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இரஷ்யா சென்றுள்ளார்.

ஆதாரம் : ICN







All the contents on this site are copyrighted ©.