2013-09-03 16:23:21

தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு அனைத்துலக ஒத்துழைப்புக்கு ஐ.நா. அழைப்பு


செப்.,03,2013. உலகில் போதுமான நலவாழ்வு வசதியின்றி இருக்கும் 250 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்குத் தேவையான நலவாழ்வு வசதிகள் கிடைப்பதற்கு உதவும் எண்ணத்தில் தண்ணீர், சரியான முறையில் பயன்படுத்தப்படுமாறு கேட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.
Stockholmல் இத்திங்களன்று தொடங்கியுள்ள உலகத் தண்ணீர் வாரக் கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய ஐ.நா. உதவி பொதுச்செயலர் Jan Eliasson, தண்ணீரைப் பயன்படுத்துவதில் புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்பு தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
மனிதக் குடியிருப்புகள் அல்லது தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரில் 80 விழுக்காடு மாசடைந்து பெருங்கடல்களிலும் ஏரிகளிலும், ஆறுகளிலும் கலக்கின்றன என்றும் Eliasson குறை கூறினார்.
தண்ணீரைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கு அனைத்துலக ஒத்துழைப்பு அவசியம் என்றும் Eliasson வலியுறுத்தினார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.