2013-09-03 16:22:08

காப்டிக் முதுபெரும் தந்தை அலுவலகம் : கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நடத்தப்படும் இராணுவத் தலையீட்டுக்கு யாராலும் நியாயம் சொல்ல முடியாது


செப்.,03,2013. கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கிறோம் என்று வீண்நியாயம் சொல்லிக்கொண்டு மத்திய கிழக்குப் பகுதியில் நடத்தப்படும் இராணுவத் தலையீட்டுக்கு யாராலும் நியாயம் சொல்ல முடியாது என்று அலெக்சாந்திரியாவின் காப்டிக் முதுபெரும் தந்தையின் அலுவலகம் கூறியது.
எகிப்து அனுபவித்த துன்பமான சூழலிலும், வகுப்புவாதத்தால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களைக் காப்பாற்றுவதற்குப் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்துலக சமுதாயத்தின் உதவியைக் கேட்பது புறக்கணிக்கப்பட வேண்டும் என்று அவ்வலுவலகத்தின் செயலர் அருள்பணியாளர் Hani Bakhoum கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதுபோல, ஆயுதத் தலையீடு ஒருபொழுதும் உண்மையான அமைதிக்குப் பாதையைத் திறந்துவிடாது, மாறாக, சண்டை சண்டையையும், இரத்தம் இரத்தத்தையும் கொண்டுவரும் எனவும் அருள்பணியாளர் Bakhoum மேலும் கூறினார்.
இதற்கிடையே, சிரியா மீது பெரிய அளவில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஒபாமா திட்டமிடுகிறார் என்று வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.