2013-09-03 16:28:09

கற்றனைத் தூறும் – ஜப்பான் - சில சுவையான தகவல்கள்


ஜப்பான் நாட்டின் நிலப்பரப்பில் 70 விழுக்காடு மலைப்பகுதியாகும். இங்கு 200க்கும் அதிகமான எரிமலைகள் உள்ளன. இவற்றில், பிஜி (Fiji) எரிமலை மிக உயரமானது. இம்மலையிலிருந்து அவ்வப்போது எரிமலைக் குழம்பு வெளியேறிய வண்ணம் உள்ளது.
இந்நாடு 6,800 தீவுகளால் ஆனது. இவற்றில், Honshu, Kyushu, Shikoku மற்றும் Hokkaido என்ற நான்கு முக்கிய தீவுகள் இந்நாட்டின் 97 விழுக்காடு நிலப்பரப்பை உள்ளடக்கியவை.
ஜப்பானில் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
இந்நாட்டில் அமைந்துள்ள பாரம்பரிய வீடுகள் எளிமையாக, அழகாக அமைந்துள்ளன. வீடுகளுக்குள் நுழையும்போது, அங்கு வீட்டுத்தளம் 6 அங்குலம் உயர்த்தப்பட்டிருக்கும். நாம் அணைந்துசெல்லும் காலணிகளைக் கழற்றிவிட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் எளிய காலணிகளை அணிந்து, வீட்டிற்குள் நுழையவேண்டும் என்பதை இந்த உயர்த்தப்பட்ட தளங்கள் நினைவுறுத்துகின்றன.
ஒரு சில வீடுகளில் தனித்துவம் மிகுந்த 'Tatami' என்ற பாய் விரிக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டிற்குள் காலணிகள் எதுவும் அணியாமல் நுழையவேண்டும் என்பது பொருள்.

ஆதாரம் : www.nomadicmatt.com/travel-blogs








All the contents on this site are copyrighted ©.