2013-09-02 16:21:45

மகப்பேறு கால இறப்புகள் அதிகரிப்பைத் தடுக்க திட்டம்


செப்.,01,2013 தமிழகத்தில் மகப்பேறு கால இறப்புகள் அதிகரிப்பதைத் தடுக்க, நலப்பணிகள் இயக்குனரகமும், நலவாழ்வுத்துறையும் தீவிரம் காட்டத் திட்டமிட்டுள்ளன.
மகப்பேறு கால இறப்பு என்பது, 2007ல் ஒரு இலட்சத்திற்கு 200 என்று இருந்தது. அதை 2015ல் 107 ஆக குறைக்கத் திட்டமிடப்பட்டது என நலவாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலக அளவில், கடந்த 2000ல் 5கோடியே 29 இலட்சம் பெண்கள் மகப்பேற்றின் போது இறந்துள்ளனர். இதில் 95 விழுக்காட்டினர் ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் நடந்துள்ளன.
இந்தியாவில், ஆண்டிற்கு ஒரு இலட்சம் பெண்கள் மகப்பேறு காலத்தில் இறக்கின்றனர். இது உலகளவில் இடம்பெறுவதில் 20 விழுக்காடாகும்.
மகப்பேறு காலத்தில், தமிழகத்தில் ஆண்டுக்கு 1,100 பெண்கள் இறக்கின்றனர். இது இந்திய அளவில் 1 விழுக்காடாகும்.
கடந்த ஆண்டு ஆய்வின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16.2 விழுக்காடு, தேனியில் 11.8 விழுக்காடு மகப்பேறு கால மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
35 வயதிற்கும்மேற்பட்ட பெண்களின் மகப்பேறு இறப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் 15.7 விழுக்காடு, தஞ்சையில் 13.5 விழுக்காடு, மற்றும் சென்னையில் 11.5 விழுக்காடாக உள்ளது.
பெண்களின் வயது அதிகமானால், மகப்பேறு கால இறப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. 35 வயதிற்குமேற்பட்டோருக்கு, இளம் வயதினரைக் காட்டிலும் இறப்பு விகிதம் 3 மடங்கு அதிகமாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.