2013-08-31 15:28:59

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவை எப்பொழுதும் பின்பற்றுவதற்கு அன்னைமரியின் உதவியைக் கேட்போம்


ஆக.,31,2013. இயேசுவின்மீது நம் கண்களை ஆர்வமுடன் பதித்து அவரை எப்பொழுதும் பின்பற்றுவதற்குச் சவாலாக இருக்கும்போதும்கூட அவரைப் பின்பற்றுவதற்கு அன்னைமரியின் உதவியைக் கேட்போம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில், @Pontifex என்ற தனது டுவிட்டர் முகவரியில் ஏறக்குறைய தினமும் எழுதி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ஜப்பானின் டோக்கியோ சோஃபியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் முதல் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்கென, தனது பிரிதிநிதியாக, சலேசியக் கர்தினால் Raffaele Farina அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டோக்கியோ சோஃபியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் முதல் நூற்றாண்டு விழா, வருகிற நவம்பர் முதல் தேதியன்று இடம்பெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.