2013-08-24 15:57:31

எகிப்துத் திருஅவை கடந்த 1,600 ஆண்டுகளில் முதன்முறையாக, திருப்பலியை இரத்து செய்துள்ளது


ஆக.,24,2013. எகிப்தில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் வெறுப்புமிகுந்த தாக்குதல்களில் கிறிஸ்தவர்கள் மையப்படுத்தப்படுவதால், அந்நாட்டின் Minyaவிலுள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 1,600 ஆண்டுகளில் முதன்முறையாக, தற்போது ஞாயிறு திருப்பலி இரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1,600 ஆண்டுகளில் முதன்முறையாக, தற்போது ஞாயிறு செபங்களைத் தாங்கள் நடத்தவில்லையென்று Minyaவின் தெற்கேயுள்ள Degla துறவு இல்லத்தின் அருள்பணி இப்ராம் கூறினார்.
ஆட்சி கவிழ்க்கப்பட்ட எகிப்திய அரசுத்தலைவர் முகமது மோர்சியின் ஆதரவாளர்கள் இந்தத் துறவு இல்லத்திலுள்ள மூன்று ஆலயங்கள் உட்பட அவ்வில்லத்தை அழித்துள்ளனர் எனவும் அருள்பணி இப்ராம் தெரிவித்தார்.
எகிப்திய மக்கள்தொகையில் 10 முதல் 12 விழுக்காட்டினர் காப்டிக் கிறிஸ்தவர்கள்.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.