2013-08-20 16:30:47

இலங்கை அரசு பேச்சைக் குறைத்துச் செயலில் ஈடுபடுமாறு ஐ.நா வலியுறுத்தல்


ஆக.,20,2013. இலங்கை அரசு பேசுவதைக் குறைத்து, அதிகமாகச் செயலில் ஈடுபட வேண்டுமென, அந்நாட்டிலுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவன அதிகாரி கேட்டுக்கொண்டார்.
இத்திங்களன்று கொழும்புவில் அனைத்துலக மனிதாபிமான நாள் கடைப்பிடிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா.வின் இலங்கைக்கான மனிதாபிமான அலுவலக ஒருங்கிணைப்பாளர் Subinay Nandy இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் உள்நாட்டுப்போரில் இடம்பெயர்ந்த ஏறக்குறைய 4,80,000 பேரை நான்காண்டுகளுக்குள் மீளக் குடியேற்றுவதற்கு ஐ.நா. உள்ளிட்ட அனைத்துலகின் பல மனிதாபிமான அமைப்புகள், இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பை வழங்கின. 2009ம் ஆண்டில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், இடம்பெயர்ந்த மக்களுக்குச் செய்ய வேண்டிய தேவைகள் இன்னும் இருக்கின்றன. எனவே அரசின் திட்டங்களை வெறும் பேச்சுவார்த்தைகளுக்குள் முடக்கிவிடாமல் அவற்றுக்கு செயலுருவம் கொடுக்க வேண்டும் என்று Nandy கூறினார்.

ஆதாரம் : ColomboPage








All the contents on this site are copyrighted ©.