2013-08-15 16:04:58

இந்தியாவில் ஒரு கத்தோலிக்க அருள்பணியாளருக்கு விருது


ஆக.15,2013. இந்தியாவில், காணாமற்போன குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பான பணியில் ஈடுபட்டுள்ள ஒரு கத்தோலிக்க அருள்பணியாளருக்கு ஆகஸ்ட் 17, இச்சனிக்கிழமையன்று விருது ஒன்று வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
BoscoNet என்ற பெயரில் பரந்ததோர் வலைதளத்தை உருவாக்கி, அதன் வழியாக பணியாற்றிவரும் சலேசிய சபையைச் சேர்ந்த அருள் பணியாளர் ஜார்ஜ் மேனம்பரம்பில் அவர்களுக்கு Imaan India Samman என்று அழைக்கப்படும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ள குழந்தைகள், இளையோர் ஆகியோரை இனம் கண்டு, அவர்களுக்குத் தேவையான பல உதவிகளைச் செய்துவரும் BoscoNetன் பணியைப் பாராட்டி, இவ்விருது வழங்கப்படுவதாக விருது விழாவின் ஒருங்கிணைப்பாளர் Bhuvanesh Ahuja அவர்கள், அருள் பணியாளர் மேனம்பரம்பில் அவர்களுக்கு அனுப்பியுள்ள மடலில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விருது தனக்குக் கிடைத்துள்ளதைக் கண்டு மகிழ்வதாகக் கூறிய அருள் பணியாளர் மேனன்பரம்பில் அவர்கள், அரசும், அரசு சாரா நிறுவனங்களும் வலுவிழந்த சிறாருக்கும், இளையோருக்கும் ஆற்ற வேண்டிய கடமை அதிகம் உள்ளது என்பதை இத்தருணத்தில் தான் வலியுறுத்த விரும்புவதாகவும் கூறினார்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.