2013-08-13 16:03:57

நேபாளத்தைக் கட்டியெழுப்புவதில் கத்தோலிக்கரைப் பின்பற்றுமாறு பிரதமர் அழைப்பு


ஆக.,13,2013. நேபாள கத்தோலிக்க இளையோர், நாட்டுக்குப் பணிசெய்வதில் பல்வேறு வழிகளை நமக்குக் காட்டுகின்றனர், மாற்றங்கள் இடம்பெற்றுவரும் இந்நேரத்தில் அவர்கள் நமக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாய் உள்ளனர் என்று நேபாள இடைக்காலப் பிரதமர் Khilaraj Regmi அந்நாட்டு கத்தோலிக்க இளையோரைப் பாராட்டியுள்ளார்.
அனைத்துலக இளையோர் தினத்தையொட்டி தேசிய தொலைகாட்சியில் இவ்வாறு உரையாற்றிய நேபாள பிரதமர் Khilaraj, பல நேபாள இளையோர் வளத்தையும் பணத்தையும் நாடிச் செல்கின்றனர், ஆனால் கத்தோலிக்க இளையோர் வித்தியாசமான எடுத்துக்காட்டுகளாய் உள்ளனர், அவர்களை நாம் பின்பற்ற வேண்டுமெனக் கூறினார்.
தேசிய உணர்வைத் தட்டியெழுப்பக்கூடிய பல இளம் நேபாளியர்கள் நாட்டுக்குத் தேவை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
நேபாள மக்கள்தொகையில் 0.45 விழுக்காடே கத்தோலிக்கர்.








All the contents on this site are copyrighted ©.