2013-08-13 15:31:59

கற்றனைத் தூறும் ஆகஸ்ட் 15 விடுதலை நாள், இந்தியாவுக்கு மட்டுமல்ல...


ஆஙகிலேயர் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்ற நாள் ஆகஸ்ட் 15. இந்த நாள் இந்திய நாட்டுக்கு மட்டும் விடுதலை நாள் அல்ல.
1824ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து விடுதலை அடைந்த அடிமைகள் சிலர் ஆப்ரிக்காவில் லைபீரியா என்றழைக்கப்படும் நாட்டை உருவாக்கிய நாள் ஆகஸ்ட் 15.
1945ம் ஆண்டு கொரியா விடுதலை பெற்றது; 1948ல் தென் கொரியா உருவாக்கப்பட்டது; 1960ல் ஆப்ரிக்காவில், காங்கோ குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது... 1971ம் ஆண்டு, Bahrain நாடு ஆஙகிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. இவை அனைத்தும் நிகழ்ந்த நாள்... ஆகஸ்ட் 15.
உலகின் 25 நாடுகள் ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் விடுதலை நாளைக் கொண்டாடுகின்றன. இவற்றில், ஆசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, தென் கொரியா, பாகிஸ்தான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் விடுதலை நாட்கள் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்கின்றன. Benin, Burkina Faso, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, Chad, காங்கோ குடியரசு, Gabon, Ivory Coast, Niger ஆகிய ஆப்ரிக்க நாடுகள் அனைத்தும் 1960ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பல்வேறு தேதிகளில் விடுதலை பெற்றன.
எனவே, ஆகஸ்ட் மாதத்தில், குறிப்பாக, ஆகஸ்ட் 15ம் தேதியன்று உலகின் பல நாடுகள் விடுதலை வரலாற்றை, உணர்வுகளை, எண்ணங்களைக் கொண்டாடுகின்றன.

ஆதாரம் : Wikipedia








All the contents on this site are copyrighted ©.