2013-08-08 17:47:04

பாகிஸ்தானில் மரணதண்டனையை எதிர்நோக்கும் ஆசியா பீபியை விடுவிக்க உதவ இஸ்பானிய அரசுக்கு அழைப்பு.


ஆக.,08,2013. பாகிஸ்தான் நாட்டில் தேவநிந்தனைக் குற்றச்சாட்டுடன் மரணதனடனைத் தீர்ப்பிடப்பட்டுள்ள ஆசியா பீபி குறித்து இஸ்பானிய அரசு மௌனம் காப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது அந்நாட்டின், மக்கள் விடுதலைக்கான இணையதளம் ஒன்று. மொரோக்கோ நாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 48 இஸ்பானிய மக்களின் விடுதலையை அந்நாட்டிற்கு பயணம்செய்தபோது, இஸ்பானிய மன்னர் Juan Carlos பெற்றுத்தந்தது குறித்து தன இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள இச்செய்தி நிறுவனம், கிறிஸ்தவத்திற்காக மரணதண்டனையை எதிர்நோக்கும் ஆசியா பீபியின் விடுதலைக்காக இஸ்பானிய அரசு வாயத்திறக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
11 குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடத்திய ஓர் இஸ்பானியர், மன்னரின் தலையீட்டுக்குப்பின் மொரோக்கோவில் விடுவிக்கப்பட்டிருக்கும்போது, தேவநிந்தனைச்சட்டத்தின்கீழ் பாகிஸ்தானில் மரணதண்டனையை எதிர்நோக்கும் ஆசியா பீபியை விடுவிப்பதில் முயற்சி எடுக்க இஸ்பானிய அரசு தயங்குவது ஏன் என்ற கேள்வியும் அந்த இஸ்பானிய இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.