2013-08-03 16:22:52

மெக்சிகோ உயர்மறைமாவட்டம் திருநற்கருணை புதுமை குறித்து விசாரணை


ஆக.,03,2013. மெக்சிகோவில் கடந்த வாரத்தில் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்டுள்ள திருநற்கருணை புதுமை குறித்த உண்மை நிலையை அறிவதற்கு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக Guadalajara உயர்மறைமாவட்ட முதன்மைக்குரு Ramiro Valdes Sanchez கூறினார்.
அன்னைமரி ஆலயப் பங்கின் அருள்பணி Jose Dolores Castellanos Gudino என்பவர் கடந்த ஜூலை 24ம் தேதி திருநற்கருணையின் முன்னர் செபித்துக்கொண்டிருந்தபோது, திருநற்கருணையிலிருந்து ஓர் ஒளி வந்ததாகவும், அதிலிருந்து ஒரு குரலைத் தான் கேட்டதாகவும் கூறியுள்ளார்.
திருநற்கருணையில் தான் தொடர்ந்து புதுமைகளைச் செய்வேன் என்றும், ‘நமது அன்னையோடு அன்பின் மனுஉருவில் திருநற்கருணை புதுமை’ என அது அழைக்கப்பட வேண்டும் என்றும் அக்குரல் கூறியதாக அருள்பணி Castellanos Gudino மேலும் கூறியுள்ளார்.
திருநற்கருணையிலிருந்து அக்குரலைக் கேட்டவுடன் அந்த அருள்பணியாளர் ஆலய மணிகளை அடிக்க, அனைத்து மக்களும் ஆலயம் வந்தனர் என்றும், இவ்வாலயத்தில் இப்போதும், இந்த நாள் முழுவதும் இருப்பவர்கள்மீது தான் அருளைப் பொழிவேன் என்று அக்குரல் அச்சமயத்தில் கூறியது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.