2013-08-02 16:26:54

அமெரிக்க இளையோர் ஆப்ரிக்காவுக்கு ஒரு இலட்சம் உணவுப் பொட்டலங்கள்


ஆக.,02,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Atlantaவில் இளையோர் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட இளையோர் ஆப்ரிக்காவுக்கு ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்து அனுப்பியுள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்காவின் Burkina Faso நாட்டில் பசியால் வாடும் மக்களுக்கென 1,00,386 சத்துணவுப் பொட்டலங்களைத் தயார் செய்து அனுப்பியுள்ளனர் Atlanta இளையோர்.
2,500க்கு மேற்பட்ட இளையோர் இரண்டு மணி நேரத்தில் இந்த உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்தனர் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் CRS என்ற கத்தோலிக்க பிறரன்பு நிறுவனத்தின் உதவித் தலைவர் Joan Rosenhauer கூறினார்.
திருஅவை ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் விரும்புகிறார் என்றுரைத்த Rosenhauer, நாம் அனைவரும் உலகளாவியத் திருஅவையின் அங்கங்கள் என்பதை நினைவுபடுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகளும் மரபுகளும் அனைத்து எல்லைகளையும் கடந்து செல்கின்றன என்று கூறினார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.