2013-08-01 16:22:05

உலக இளையோர் நாள் நிகழ்வுகளைத் தொடர்ந்து, 5,000க்கும் அதிகமான இளையோர் அருள் பணியாளர்களாகவும், துறவியராகவும் வாழ முடிவு


ஆக.01,2013. ஜூலை 28, கடந்த ஞாயிறன்று சிறப்புடன் முடிவுற்ற 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளைத் தொடர்ந்து, கடந்த திங்களன்று 50,000க்கும் அதிகமான இளையோர் கலந்துகொண்ட இறையழைத்தல் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
ரியோ தெ ஜனெய்ரோ நகரின் காங்கிரஸ் மையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ரியோ பேராயர் Orani Tempesta தலைமைத் தாங்கினார்.
வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn, பாஸ்டன் பேராயர் கர்தினால் Sean O’Malley, சிட்னி பேராயர் George Pell, Sao Paulo பேராயர் கர்தினால் Odilo Scherer ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், 75 ஆயர்களும் கலந்துகொண்டனர்.
Neocatechumenal Way என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில், 3,000க்கும் அதிகமான இளையோர் அருள் பணியாளர்களாகவும், 2,000க்கும் அதிகமான இளம் பெண்கள் அருள் சகோதரிகளாகவும் வாழ்வைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்தனர்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.