2013-07-30 16:14:09

மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் இஸ்ரேல்-பாலஸ்தீன நேரடிப் பேச்சுவார்த்தை


ஜூலை,30,2013. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்கு இடையேயான முதல் நேரடிப் பேச்சுவார்த்தைகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக வாஷிங்டனில் தொடங்கியுள்ளன.
இஸ்ரேலின் சார்பாக Tzipi Livniயும், பாலஸ்தீனாவின் சார்பாக Erekatம் இதில் கலந்து கொள்கின்றனர்.
இரமதான் நோன்பு காலத்தில் இப்பேச்சுவார்த்தை இடம்பெறுவது, பாலஸ்தீனாவுக்கு மிகவும் விசேடமான ஒன்று என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர் John Kerry கூறினார்.
100க்கும் அதிகமான பாலஸ்தீனியக் கைதிகளை விடுதலை செய்வதற்கு இஸ்ரேல் அரசு இசைவு தெரிவித்ததையடுத்து இப்பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தது பாலஸ்தீனம்.
வரவிருக்கும் மாதங்களில் நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளுக்கான நடைமுறை வரைவுத்தொகுப்பு பற்றி தற்போது பேசப்பட்டதாக அமெரிக்க அரசுச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.