2013-07-26 16:08:45

நேபாள சமூக அமைப்பு உட்பட ஐவருக்கு Ramon Magsaysay விருது


ஜூலை,26,2013. மக்கள் வியாபாரப்பொருட்களாக கடத்தப்படுவதை எதிர்த்துப்போராடும் நேபாளத்தின் Shakti Samuha என்ற அமைப்பு உட்பட ஐவருக்கு இவ்வாண்டின் Ramon Magsaysay விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலில் அடிமைகளாக நடத்தப்பட்டிருந்த 15 பெண்களால் 2000மாம் ஆண்டு நேபாளத்தில் துவக்கப்பட்ட Shakti Samuha அமைப்பு, தற்போது பாலியல் தொழிலாளர்களைக் காப்பாற்ற உழைத்து வருகின்றது.
இந்த அமைப்பின் சமூகச்சேவைகளைப் பாராட்டி இவ்வாண்டின் Ramon Magsaysay விருதை வழங்குவதாக உரைத்துள்ள Magsaysay நிறுவனம், சமூக மேம்பாட்டிற்காகப் பணியாற்றி வரும் ஆப்கானிஸ்தானின் ஒரே பெண் ஆளுனர் Habiba Sarabi, மியான்மாரைச் சேர்ந்த கைம்பெண் Lahpai Seng Raw, பிலிப்பீன்சின் மருத்துவர் Ernesto Domingo ஆகியோருக்கும் இந்தோனேசியாவின் இலஞ்ச ஒழிப்பு அமைப்பான Komisi Pemberantasan Korupsi என்பதற்கும் இவ்விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.