2013-07-24 15:31:48

அமைதியின் தூதராக கர்தினால் பிமென்ட்டா விளங்கினார் - இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Gracias


ஜூலை,24,2013. பல்வேறு கருத்துக்களும், கண்ணோட்டங்களும் கொண்ட மக்களை ஒருங்கிணைக்கும் அமைதித் தூதராக கர்தினால் சைமன் பிமென்ட்டா அவர்கள் விளங்கினார் என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias கூறினார்.
ஜூலை 19, கடந்த வெள்ளிக்கிழமையன்று தன் 93வது வயதில் இறையடி சேர்ந்த முன்னாள் மும்பைப் பேராயர் கர்தினால் சைமன் பிமேன்ட்டா அவர்களின் இறுதிச் சடங்குத் திருப்பலி இச்செவ்வாயன்று கர்தினால் அவர்கள் பிறந்த இடமான Marol எனுமிடத்தில் நடைபெற்றது.
இத்திருப்பலியைத் தலைமையேற்று நடத்திய மும்பைப் பேராயர் கர்தினால் Gracias அவர்கள், கர்தினால் பிமேன்ட்டா அவர்களின் வாழ்வும் பணியும் மென்மையான, அமைதியான முறையில் அமைந்திருந்தன என்று கூறினார்.
தொடர்ந்து மழை பெய்த போதிலும், 5000க்கும் அதிகமானோர் கூடிவந்து, கர்தினால் பிமேன்ட்டா அவர்களுக்குத் தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர் என்று இந்தியச் செய்திதாள்கள் கூறின.

ஆதாரம் - Times of India








All the contents on this site are copyrighted ©.