2013-07-18 16:22:22

இஸ்பெயினின் ஓர் அரசு சாரா அமைப்பு, ஏழை நாடுகளின் பார்வைத்திறன் குறைந்த குழந்தைகளுக்கு உதவி


ஜூலை,18,2013. இஸ்பெயின் நாட்டில் இயங்கி வரும் ஓர் அரசு சாரா அமைப்பு, பார்வைத்திறன் குறைந்த 2 இலட்சத்து 50,000க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கடந்த 15 ஆண்டுகளாக உதவிகள் செய்துள்ளது.
ONCE என்றழைக்கப்படும் இந்த அமைப்பின் உதவியால், இந்தியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் பயனடைந்துள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பார்வைத்திறன் அற்றோரைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், மற்றும் பார்வைத்திறன் அற்றோர் வாசிக்கும் Braille வழிப் புத்தகங்கள் என்ற பல வழிகளில் இவ்வமைப்பினர் உதவிகள் செய்து வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 121,684 குழந்தைகள் ONCE அமைப்பினால் பயனடைந்துள்ளனர் என்று Fides செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.