2013-07-17 16:01:32

கர்தினால் Rai : அரசினால் உருவாக்கப்படாத இராணுவம் சட்டத்திற்குப் புறம்பானது


ஜூலை,17,2013. எந்த ஒரு நாட்டிலும் அரசினால் உருவாக்கப்படாத இராணுவம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், இத்தகைய அமைப்புக்கள் செயலாற்றுவது நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் என்றும் அந்தியோக்குவின் மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros Rai கூறினார்.
சட்டப்படி நிறுவப்படாத இராணுவ அமைப்புக்கள் ஒவ்வொன்றும், நாட்டின் சட்டம், ஒழுங்கு இவற்றைக் கையில் எடுக்கும்போது, பொதுவான பாதுகாப்பு அழிந்துவிடும் என்று ஜூலை 14, கடந்த ஞாயிறன்று கர்தினால் Boutros Rai அவர்கள் வழங்கிய மறையுரையில் குறிப்பிட்டார்.
லெபனான் நாட்டில், 1943ம் ஆண்டு இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட அமைதி உடன்பாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Boutros Rai அவர்கள், இந்த உடன்பாட்டுக்கு எதிராக, உள்நாட்டிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கின்றன என்று தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.