2013-07-15 15:59:00

காற்று மாசுக்கேட்டால் ஆண்டுக்கு 20 இலட்சம் மரணங்கள்


ஜூலை,15,2013. காற்று மாசுக்கேட்டால் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 20 இலட்சம் மரணங்கள் இடம்பெறுவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதயம் மற்றும் நுரையீரல் தொடர்புடைய நோய்களுக்கு, குறிப்பாக, நுரையீரல் புற்றுநோய்களுக்கு காற்று மாசுக்கேடு முக்கியக்காரணமாக உள்ளது எனக்கூறும் இந்த ஆய்வறிக்கை, காற்று மாசுக்கேட்டால் அதிக எண்ணிக்கையில் மக்கள் இறப்பது கிழக்கு மற்றும் தென் ஆசியாவில்தான் எனவும் தெரிவிக்கிறது.
சுவாசிக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகில் மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும் என்றார் ஆய்வாளர் Jason West.
கட்டிடப்பணிகள் மற்றும் வாகனங்கள் மூலமாக காற்று மாசுக்கேடு அடைவதைப்பற்றியும் இவ்வாய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Catholic Online








All the contents on this site are copyrighted ©.