2013-07-13 16:08:49

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு கிறிஸ்துவை நன்கு அறிவதற்கு ஒவ்வொரு நாளும் ஏதாவது உறுதியான நடைமுறை வழிகளைக் கையாள வேண்டும்


ஜூலை,13,2013. இயேசு கிறிஸ்துவை மேலும் நன்றாக அறிவதற்கு இந்நம்பிக்கை ஆண்டில் ஒவ்வொரு நாளும் ஏதாவது உறுதியான நடைமுறை வழிகளைக் கையாள வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‏@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ப்ரெஞ்ச், போர்த்துக்கீசியம், ஜெர்மானியம், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் எழுதி வருகிறார்.
மேலும், இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு காஸ்தெல் கந்தோல்ஃபோ செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ், காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லப் பணியாளர்களைச் சந்தித்து உரையாற்றுவார்.
அல்பானோ மறைமாவட்ட ஆயர் Marcello Semeraro, காஸ்தெல் கந்தோல்ஃபோ பாப்பிறை இல்ல இயக்குனர் Saverio Petrillo, அந்நகர் மேயர் Milvia Monachesi ஆகியோரையும் சந்திப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பகல் 12 மணிக்கு அங்கிருந்து மூவேளை செப உரையாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ், அந்நகரிலுள்ள இயேசு சபை இல்லக் குழுவினரோடு மதிய உணவருந்திய பின்னர் வத்திக்கான் திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.