2013-07-13 16:14:11

இந்தியா : மனிலா பல்கலைக்கழகத்துக்கு அன்னை தெரேசா உருவச்சிலை


ஜூலை,13,2013. பிலிப்பீன்சின் மனிலாவிலுள்ள புனித தாமஸ் பல்கலைக்கழகத்துக்கு அன்னை தெரேசா உருவச்சிலை ஒன்றை நன்கொடையாக அளித்துள்ளது இந்தியா.
மேற்கு வங்காளத்தை மையமாகக் கொண்டு பணிசெய்யும் Gautam Pal என்ற இந்தியச் சிற்பியால் வடிவமைக்கப்பட்ட இடுப்பு அளவிலான முத்திப்பேறுபெற்ற அன்னை தெரேசா உருவச்சிலை மனிலாவின் புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மாலை 3 மணிக்குத் திறந்து வைக்கப்படும்.
பிலிப்பீன்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதர் Amit Dasguptaவும், புனித தாமஸ் பல்கலைக்கழகத் தலைவர் அருள்பணி Herminio Dagohoyம் இத்திறப்பு விழா நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திறன், அர்ப்பணம், கருணை ஆகிய புனித தாமஸ் பல்கலைக்கழகத்தின் விழுமியங்கள் உயிரூட்டம் பெறுவதற்கு அன்னை தெரேசா தொடர்ந்து தூண்டுதலாய் இருந்து வந்தது இந்நிகழ்வில் நினைவுகூரப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : CBCP







All the contents on this site are copyrighted ©.